Friday, October 14, 2011

முத்தம்

அவசர முத்தம் வேண்டும்
அரை நொடி தந்தால் போதும்
வேண்டாம் என மறுத்தாள்
விடவில்லை நான்!

அழுத்தி முத்தம் இட்டு
அவள் அழகு பல் பட்டு
என் ஒரிதழில் வெட்டு!

கடித்தவளை காணும் பொருட்டு
அவசர விஜயம்
ஐந்தாறு குருதி துளிகள்!

தொட்டுப் பார்தேன்
சொட்டியது
கொஞ்சம் அழுத்தி விட்டேன்
கொட்டியது!

அவசர சிகிச்சை
ஐம்பதாயிரம் பாக்ரியாக்கள் என்றேன்!

அழுத்தி பிடித்தாள்
என்னிதழ் குருதி குடித்தாள்!

விடியும் வரை
பண்டமாற்று முறை!

கண்ணாடி சாட்சி
காட்டிக் கொடுத்தான்
என்னிதழ் கூட சிவந்திருந்ததை!

Monday, August 22, 2011

தேவதை அவள்..


இருள் மட்டுமே சூழ்ந்த
தனிமை நிறைந்த உலகமது..
பட்டாம்பூச்சியின் ஸ்பரிசம் கூட உணர்ந்திடா மனம் எனது..
இருள் விலக்கிய மின்மினி தேவதை அவள்..

அவளது வெளிச்சம் கொஞ்சம்
ஆனால் வீச்சு அதிகம்...
என் கை பிடித்து
கவி கற்றுக் கொடுத்தாள்..
கடல் அடியில் செவ்வானம்
காட்டினாள்
தென்றல் வழியும் மெல்லிசை
ஊட்டினாள்
கொட்டும் மழையும் கொஞ்சும் மழழையும்
மலை மேல் வானமும்
குதித்தெழும் அருவியும்
சட்டென பறக்கும் சிட்டுக் குருவியும்
இசையும் மொழியும் தமிழும்
அழகும் அழகியலும் அத்தனையும்
அள்ளித் தெளித்து இதுதான் உலகம் என்றாள்..!

அத்தனையும் கற்றுத் தேறும்
முன்னே காணாமல் போனாள்
கானலாய் ஆனாள்!

இன்று
வெளிச்சம் மட்டுமே நிறைந்த
அழகிய உலகம் எனது...
பல நூறு நிலாக்களுக்கும்
பல்லாயிரம் நட்சத்திரங்களுக்கும்
பஞ்சமில்லை என் வழியில்..

ஆயினும்
நிலவின் முழுஒளி
இரவை விழுங்க
என் நிழல் காட்டி இருள் வளர்த்தேன்..
எனக்குள் கரைந்து போன
மின்மினியின் வரவை
எண்ணி!

Saturday, August 13, 2011

காதல் தவிர வேறென்ன?!-2


உன்னை அழவிடாமல் நானும்

என்னை அழவிடாமல் நீயும்

கவனமாக காய் நகர்த்தும்

இச்சதுரங்க ஆட்டத்தில்

கட்டிப் புரண்டு அழுகிறது

நம் காதல்!

------------ <3

இப்போதெல்லாம்

நீ கனவில் கூட

வருவதில்லை...

தூக்கமே கனவாகிப்

போனதால்...!!!

Friday, August 12, 2011

காதல் தவிர வேறென்ன?!


அழுது புலம்பி அரற்றி என்ன பயன்?..

அதற்கு பதிலாய்

கடைசியாக ஒரு முறை

உன் நேசத்தை சொல்லி விட்டு போ..

நீ இல்லாத இடத்தில்

உன் நினைவுகளாவது நெஞ்சோடு

நிறைந்திருக்கட்டும்!

--------------------
நம் காதலின் கடைசி புள்ளியாய்

நீ விட்டு சென்ற

கண்ணீர் துளியெல்லாம்

வெள்ளமாய் மாறி

மீண்டும் மீண்டும் மூழ்கிப் போகிறேன்

காதல் கடலில்!
--------------------

விழுவது தவறல்ல

விழுந்த பின்

எழ நினைப்பது தான் தவறு...

காதலில்!
---------------------
நீ விலகி சென்றாலும்

என்னை விலக்கிச் சென்றாலும்

நீ விட்டுச் சென்ற

என் உயிர் மொத்தமும்

எடை கூட்டி செல்லும்

என் இறுதி ஊர்வலத்திலும்

உன் காதலோடு!

Saturday, July 16, 2011

காத்திருக்கிறேன்காத்திருத்தல் பெருவலி
காதலில் அது முடிவிலி..!
கருவறைக் குழந்தயாய்
சுருண்டு கிடக்கிறேன்
உன் இதழசைவில்
நம் காதலை பிரசவிக்க...

எப்போது வருவாய்?
காத்திருக்கிறேன்!

-------------------

காதலித்தலை விட
காதலிக்கப்படுதல் சுகம்
என்று அறிந்த
சுயனலவாதி அவள்!
அள்ளித் தெளித்த காதலில்
அரை சதமாவது திருப்பித் தருவாள்
என்ற நம்பிக்கையில்
அமாவாசையின்
அடி இரவில்
அமர்ந்து பவுர்ணமிக்காக
காத்திருக்கிறேன் நான்!

Wednesday, June 1, 2011

உன்னோடு நான்!தண்டவாளமாய் சாலை
நுரைவலையாய் வானம்
மழை வெயில் அறியா மாலை வேளை

நம் விரல்களின் ஸ்பரிசத்தால்
சில்லென்ற காற்றை சூடாக்கினோம்

ஆறு மணி நேரம் பேசியிருப்போம்
அரை நொடிக்கொருமுறை பார்த்திருந்தோம்
உடைகள் மட்டும் உரச
உள்ளம் பூரித்திருந்தோம்!

யாருமில்லா வனாந்தரம் அதில்
அடிக்கடி நீ சொல்லும்
காது மடல் ரகசியங்கள்
என் கழுத்தில் படும் உன் மூச்சுக் காற்று
என் உள்ளங்காலும் சிலிர்க்கும்!

பசியை போக்க பேச்சையும்
தாகம் தீர்க்க பார்வையயும்
பரிமாறிக் கொண்டோம்!

கடல் மகளும் கதிரவனும்
முத்தமிட்டு கொண்ட நேரமது!

கருமணலில் கால் தடம் பதித்து
கடலையே விலை பேசினோம்
கால் தடங்களெல்லாம்
காதல் தடங்களாய்!

ஆயிரம் முறை வந்து போனாலும்
அர்த்தம் பட
எதுவும் பேசாது அலை...
அது போலதான் நீயும் என்றேன்!

ஏதேதோ பேசினாய்...
கரையை அளக்க வேண்டுமென்றாய்
கடலை கடக்க வேண்டுமென்றாய்
கடல் நீரில் கால் வைத்து
என் கை பற்றினாய்!

அலைக்கு உன் மேல் ஆசை போலும்
அடித்து தூக்கியது
பறந்து விழுந்தோம்!

கரைமேல் நான்
என்மேல் நீ!

அலைக்கு நன்றி!

Tuesday, May 31, 2011

கற்றுக் கொடுத்தது காதல்...


அந்தி மாலை
சாரல் மழை
தூரத்து வான்மேகம்
வான்சிந்தும் வானவில்
சிலிர்த்து நிற்கும் பறவைகள்
இடம் கொடுக்கும் குடை மரம்
ஜன்னல் ஓரம்
ஒற்றை நாற்காலி
அதில் நான்
மனதெங்கும் என்னவள்
சிந்தி சிரிக்கும் காதல்
பொங்கி வழியும் கவிதை
ஆனால் பேனா????

தேவையில்லை

சிரிக்கின்ற-அவள்
இதழ் மை எடுத்து
எழுதும் முன்
எகத்தாளமாய் சிரிக்கிறது
என் காதல்...

இரு வரி கவிதையாம்
அவள் இதழிடம் கடன் வாங்கி
எழுதி முடித்து
என்னத்தை கிளிக்க போகிறாய்?!

இரு வரியை நான்காக்கு
அவள் முகவரியை முழுதாக்கு
கற்றுக் கொடுத்தது காதல்...
கடல் தாண்ட புறப்பட்டு விட்டேன்
நான்...!!!!!!

Tuesday, May 24, 2011

உன் ஒற்றை முத்தம்

என் அறை முழுதும்
இறைந்து கிடக்கும் உன் முத்தங்களை
அடுக்கி வைக்க இடமில்லை
என் இதய வங்கியில்...
அவசர பரிமாற்றம்
ஒரு ஆயிரம் முத்தங்களையாவது
திரும்ப பெற்று கொள்ளேன்!

இறகு வழி நுழையும் காற்றுக்கு கூட
இடம் தராமல் -நீ
இறுக்கி அணைத்து
இட்ட முத்தத்தின் ஈரம்
ஆவியாகி போனது
என்னுடல் அக்கினி சூட்டால்...

மண்ணுக்கு மழை தருவோம்...
இடைவிடாமல்
ஈரமாக்கு நீ
ஆவியாக்குகிறேன் நான்!

செத்து பிழைக்க
வித்தை தேவையில்லை
உன் ஒற்றை முத்தம் போதும்!

அவசரம் வேண்டாம்
அரை நொடி கழித்தே கொடு....!

Saturday, May 7, 2011

என்னையும் வாழ்துரான்கப்பா!
அழகான அன்பு
ஆக்கபூர்வ அறிவியல்
இனிமையான இயல்பு
ஈரம் சொட்டும் கவித்துவம்
உக்கிரமான உணர்வலை
ஊசி போன்ற கூர்மை
எட்டித்தொட முடியா எளிமை
ஏகத்துவமான கொள்கை
ஐம்புலங்களின் ஆற்றல்
ஒழுக்கத்தின் ஒப்புவமை
ஓசையின்றி மௌனிக்கும் உள்ளத்தின் விசும்பல்கள்
இவையனைத்தும் ஓரிடத்தில் கண்டேன் உன்னுருவில்....
( என்னை வாழ்த்தி பாடி பரிசில் பெற்ற ஒரு ஜீவன் எழுதியது)

Thursday, May 5, 2011

நிலவு


நிலவுக்காக காத்திருக்கும்
இரவின் வலி அறியாமல்
அடிக்கடி வருகிறது
அமாவாசையும் அடைமழையும்!

Saturday, April 30, 2011

மின்மினி தேவதை


நிலவின் முழு ஒளி என் இரவை விழுங்க
என் நிழல் காட்டி இருள் வளர்த்தேன்...
எனக்குள் கரைந்து போன
மின்மினியின் வரவை எண்ணி!


--------------------------------


நீ உறங்கும் வேளையில்

காற்றுக்கு ஓய்வு இல்லை
காலம் நகர்வதில்லை

பூக்கள் மலர்வதில்லை
வண்டுகள் பறப்பதே இல்லை

அலாரம் அடிப்பதில்லை
கொசுக்கடி அறவே இல்லை

செல்போன் சிணுங்கல் இல்லை
செல்லமாய் உன்னை கொஞ்சுவது கூட இல்லை.....
ஏனடி இவ்வளவும்?!

தேவதையின் கனவை கலைக்க
யாருக்கு தான் மனசு வரும்!

மொக்கை கவிதை

உருகி உருகி காதலித்த போது கூட
ஒரு உணர்வும் இருந்ததில்லை
இந்த மரக்கட்டை உடம்பில்!
ஆனால் இன்று
அட்டு பிகரின் மொக்கை பார்வையில்
அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சி பறக்கிறதே...

ஒரு வேளை அல்சராக இருக்குமோ?