Tuesday, May 31, 2011

கற்றுக் கொடுத்தது காதல்...


அந்தி மாலை
சாரல் மழை
தூரத்து வான்மேகம்
வான்சிந்தும் வானவில்
சிலிர்த்து நிற்கும் பறவைகள்
இடம் கொடுக்கும் குடை மரம்
ஜன்னல் ஓரம்
ஒற்றை நாற்காலி
அதில் நான்
மனதெங்கும் என்னவள்
சிந்தி சிரிக்கும் காதல்
பொங்கி வழியும் கவிதை
ஆனால் பேனா????

தேவையில்லை

சிரிக்கின்ற-அவள்
இதழ் மை எடுத்து
எழுதும் முன்
எகத்தாளமாய் சிரிக்கிறது
என் காதல்...

இரு வரி கவிதையாம்
அவள் இதழிடம் கடன் வாங்கி
எழுதி முடித்து
என்னத்தை கிளிக்க போகிறாய்?!

இரு வரியை நான்காக்கு
அவள் முகவரியை முழுதாக்கு
கற்றுக் கொடுத்தது காதல்...
கடல் தாண்ட புறப்பட்டு விட்டேன்
நான்...!!!!!!

Tuesday, May 24, 2011

உன் ஒற்றை முத்தம்





என் அறை முழுதும்
இறைந்து கிடக்கும் உன் முத்தங்களை
அடுக்கி வைக்க இடமில்லை
என் இதய வங்கியில்...
அவசர பரிமாற்றம்
ஒரு ஆயிரம் முத்தங்களையாவது
திரும்ப பெற்று கொள்ளேன்!

இறகு வழி நுழையும் காற்றுக்கு கூட
இடம் தராமல் -நீ
இறுக்கி அணைத்து
இட்ட முத்தத்தின் ஈரம்
ஆவியாகி போனது
என்னுடல் அக்கினி சூட்டால்...

மண்ணுக்கு மழை தருவோம்...
இடைவிடாமல்
ஈரமாக்கு நீ
ஆவியாக்குகிறேன் நான்!

செத்து பிழைக்க
வித்தை தேவையில்லை
உன் ஒற்றை முத்தம் போதும்!

அவசரம் வேண்டாம்
அரை நொடி கழித்தே கொடு....!

Saturday, May 7, 2011

என்னையும் வாழ்துரான்கப்பா!




அழகான அன்பு
ஆக்கபூர்வ அறிவியல்
இனிமையான இயல்பு
ஈரம் சொட்டும் கவித்துவம்
உக்கிரமான உணர்வலை
ஊசி போன்ற கூர்மை
எட்டித்தொட முடியா எளிமை
ஏகத்துவமான கொள்கை
ஐம்புலங்களின் ஆற்றல்
ஒழுக்கத்தின் ஒப்புவமை
ஓசையின்றி மௌனிக்கும் உள்ளத்தின் விசும்பல்கள்
இவையனைத்தும் ஓரிடத்தில் கண்டேன் உன்னுருவில்....
( என்னை வாழ்த்தி பாடி பரிசில் பெற்ற ஒரு ஜீவன் எழுதியது)

Thursday, May 5, 2011

நிலவு


நிலவுக்காக காத்திருக்கும்
இரவின் வலி அறியாமல்
அடிக்கடி வருகிறது
அமாவாசையும் அடைமழையும்!